நாக்கிற்கு உப்பு, புளிப்பு, கசப்பு போன்ற சுவைகளின் உணர்வைத் தரும் உபகரணமொன்றை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர்.
டிஜிட்டல் சுவை இணைப்பு என அழைக்கப்படும் மேற்படி கருவியானது இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்படும் உணவுகளை சுவைப்பதற்கு பயன்பாட்டாளர்களுக்கு வழிவகை செய்கிறது.
கண்ணைக் கவரும் தோற்றத்தில் இணையத்தளத்தில் தோன்றும் உணவுகளை சுவைத்தால் எப்படியிருக்கும் என்பதை இந்த உபகரணம் வெளிப்படுத்தி பயன்பாட்டாளருக்கு புது அனுபவத்தை தருவதாக இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய நிமேஷா ரணசிங்க தெரிவித்தார்.
ஆனால் காளான், கோவா மற்றும் தக்காளி போன்ற உணவுகளில் காணப்படும் சுவையை தம்மால் உருவாக்க முடியாது போயுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேற்படி உபகரணம் நாக்கில் ஏற்படுத்தும் மின் அழுத்த வேறுபாடு காரணமாகவே நாக்கு வெவ்வேறு சுவைகளை அறிவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment