Latest News

November 26, 2013

யாழ். பல்கலை ஆசிரியர் சங்கத் தலைவர் விசாரணைக்கு அழைப்பு
by admin - 0

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அமிர்தலிங்கம் இராசகுமாரன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு இந்த விசாரணை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று (26) மாலை 2 மணிக்கு யாழ். பொலிஸ் நிலையத்திற்கு விசாணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். நேற்று உள்ளுர் பத்திரிகை ஒன்றில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்ததாக "மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படுவதை தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கமே தவிர, தமது மண்ணிற்காக வித்தாகிப்போன மாவீரர்கள் தடை செய்யப்படவில்லை......................"  என வெளியாகிய செய்தி தொடர்பாகவே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
« PREV
NEXT »

No comments