Latest News

November 23, 2013

யாழ்.பல்கலைச் சூழலில் மாவீரர் துண்டுப் பிரசுரங்கள்
by admin - 0

மாவீரர்களை நினைவு கூரும் துண்டுப் பிரசுரங்கள், கடும் பாதுகாப்பையும் மீறி யாழ். பல்கலைக்கழகச் சுற்றாடலில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.   தாயக விடுதலைக்காக வித்தாகிப் போன மாவீரர்களின் நினைவு வாரம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுவது வழமை.    கடந்த வருடம் இதே காலப் பகுதியில் மாவீரர் தினத்தன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் விளக்கேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற அசம்பாவிதத்தையடுத்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.   ஆனால் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கையாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதுடன், விடுதிகளிலிருந்தும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.    அத்துடன் யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் சோதனைகளின் பின் பதிவு செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் யாழ்.பல்கலைக்கழகச் சுற்றாடலில் சீருடையினரிந்தும், புலனாய்வாரள்களினதும் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளது.   இவ்வாறானதொரு சூழலில் யாழ்.பல்கலைக்கழகச் சுற்றாடலில் நேற்று மாவிரர் தினத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள்ளும் அவை காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
« PREV
NEXT »

No comments