Latest News

November 11, 2013

பிரித்தானிய பிரதமரின் வருகையும்; கலக்கத்தில் சிறிலங்காவும்
by admin - 0

பிரித்தானிய பிரதமர் கமரூன் ஏற்கனவே சனல் 4 காணொளியை பார்வையிட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

காணொளி தொடர்பாக சிறிலங்காவிடம் சில கடுமையான கேள்விகள் கேட்க வேண்டியுள்ளதாகவும், சிறிலங்கா இராணுவம் செய்த மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரமாக இது உள்ளது.

பொதுநலவாய மாநாட்டிற்கு நேரடியாகச் சென்று இது தொடர்பாக தான் பல கேள்விகளை கேட்டவுள்ளதாகவும். நான் பார்த்த ஆவணப்படங்களில் "நோ பயர் ஷோன்"  மிகவும் மனதை உருக்கியது.
ஆவணப்படத்திலுள்ள பல காட்சிகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல்லாயிரக் கணக்கான அப்பாவி பொது மக்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டிருக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியதுடன்,

இந்த ஆவணப் படம் பல கேள்விகளை உருவாக்கியுள்ளது. இவை அனைத்திற்கும்  சிறிலங்கா அரசு கட்டாயம் பதில் சொல்ல வேண்டிய தேவை உள்ளது.

காணாமல் போனோர் தொடர்பாக பல ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பாக மக்களிடம்நம்பிக்கை ஏற்படவில்லை.

எனவே நான் அடுத்த வாரம் ஜனாதிபதி மகிந்தவை சந்திக்கும் போது  இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள சுயாதீன விசாரணைஆணைக்குழுவினால் தீர்வு வழங்க முடியாவிட்டால் அதற்குப் பதிலாக சர்வதேச விசாரணை  குழு நிச்சயமாக அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

« PREV
NEXT »

No comments