Latest News

November 11, 2013

வலி வடக்கு நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நாளை கவனயீர்ப்பு போராட்டம்! - மாவை எம்.பி
by admin - 0

வலி வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்தை தடுப்பது, அம் மக்களின் வாழ்விடங்களை அடாத்தாக இடித்தழிப்பது என்பவற்றைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சோ சேனாதிராசா தலைமையில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.   குறித்த ஆர்ப்பாட்டம் நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி தொடர்சியாக ஜந்து நாட்கள் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மாவிட்புரம் கந்தசுவாமி கோவில் முன்றலில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    எமது வாழ்வுரிமையையும், நில உரிமையையும் திட்டமிட்டு இராணுவத்தினர் அழிப்பதை தடுத்து நிறுத்த வேண்டியும்; இந்த நியாயத்தை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு வரும் நோக்குடனேயே இந்தப் போராட்டம் பாதிக்கப்பட்ட வலி வடக்கு 24 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த மக்களால் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.   மேலும், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவை வழங்கி பங்குகொள்ளுமாறு கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் நகரசபை,பிரதேசசபை தவிசாளர்கள், துணைத்தவிசாளர்கள்,மற்றும் உறுப்பினர்களையும் பொது மக்களையும் வேண்டுகிறோம் என அவர் தெரிவித்தார். 
« PREV
NEXT »

No comments