Latest News

November 18, 2013

விரைவில் தலைகீழாகத் திரும்பவுள்ள சூரியன்
by admin - 0

 சூரியன் தலைகீழாகத் திரும்பலடையவுள்ள முக்கிய நிகழ்வு அடுத்த சில வாரங்களில் இடம்பெறவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிக அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆனால், இதன்போது செய்மதிகள் மற்றும் ரேடியோ அலைகளில் குறுக்கீடு ஏற்படலாம் என நாஸா தெரிவித்துள்ளது. சுமார் 11 வருடங்களுக்கு ஒரு முறை காந்தப் புலத்தின் எதிர்முனைவுகளால் சூரியன் இவ்வாறு திரும்பலடையும். இது சூரியன் சுழற்சியின் முடிவில் ஏற்படுகின்ற ஒரு நிகழ்வாகும். இது எப்போது இடம்பெறும் என சரியாகக் கணிக்க முடியாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அடுத்த 3 வாரங்களுக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இம்மாற்றத்தினால் ஏற்படும் புவிகாந்தபுல அலைவுகளால் செய்மதிகள் மற்றும் வானொலி அலைகளில் பாதிப்பு ஏற்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தின் வில்கொஸ்; சூரிய கண்காணிப்பக்திலிருந்து ஆய்வாளர்கள் நுணுக்கமாக அவதானிக்கவுள்ளனர். இது குறித்து கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் டொட் ஹுக்ஸ்ஸெமா கூறுகையில், இது மிகப்பெரிய அளவிலான செயற்பாடு. ஆனால் இவற்றைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments