Latest News

November 07, 2013

காமன்வெல்த்: இந்தியா பங்கேற்க எதிர்ப்பு: சென்னையில் மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
by admin - 0

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் 3 கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில், கல்லூரி மாணவர்கள் செம்பியன், ரத்னவேலன், இளவரசன் ஆகிய 3 பேரும் உண்ணாவிரதத்தை தொடங்கினர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று, அவர்களை கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். அங்கும் உண்ணாவிரதத்தை தொடர்ந்த மாணவர்கள் 3 பேரும் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் அண்ணா சாலையில் ஒரு இடத்தில் தங்கிய அவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

பின்னர் பெரம்பூர் பாரதி ரோட்டில் உள்ள வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் மாணவர்கள் 3 பேரும் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்கிறார்கள். இதுதொடர்பாக மாணவர் செம்பியன் கூறியதாவது:–

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தும் வேளையில், காமன்வெல்த் அமைப் பிலிருந்தே இலங்கையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். இதுதவிர இலங்கையில் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இலங்கை தூதரகங்களை இந்தியாவில் இருந்து அகற்ற வேண்டும், காமன்வெல்த் மாநாடு தொடர்பாக போராட்டம் நடத்தி கைது செய்யப் பட்டவர்ககளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைளை வலியுறுத்தியும்தான் எங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளோம். இதில் நிச்சயம் வெற்றிபெறுவோம். கோரிக்கைள் நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும். இவ்வாறு மாணவர் செம்பியன் கூறினார்.
« PREV
NEXT »

No comments