Latest News

November 04, 2013

காந்தியின் அகிம்சைக்கு பணிந்துதான் இந்தியாவுக்கு பிரிட்டன் சுதந்திரம் கொடுத்தது உண்மைஎன்றால் எம்முடைய இந்த போராட்டமும் வெற்றிகொள்ளும்
by admin - 0

வணக்கம் நண்பர்களே, உறவுகளே மீண்டும் ஓர் அகிம்சை போராட்டம்,
வெற்றி தோல்விக்கு அப்பால், எனது இனத்தின் விடுதலைக்கும், இனப்படுகொலைகளுக்கு நீதி கேட்டு ஓர் போராட்டம், காந்தியின் அகிம்சைக்கு பணிந்துதான் இந்தியாவுக்கு பிரிட்டன் சுதந்திரம் கொடுத்தது உண்மை என்றால் எம்முடைய இந்த போராட்டமும் வெற்றிகொள்ளும் என்பதில் சந்தேகம் இருக்காது, ஆனால் அனைவரும் வரலாறு அறிந்தவர்கள், என்ன
நடக்கும் என்பதும் அறிவோம். இது ஒர் மரணப் போராட்டம் அல்ல மாறாக நீதியை அழுத்தமாக தட்டிக் கேட்கும் போராட்டமாக இருக்கும், நமது சகோதரி இசைப்பிரியா அக்காவுக்கு நடந்தது உலகில் எந்த ஒரு இனத்திற்கும் நடந்திராத கொடூரம்,  அச்செயல் கொடுமையானது, அநீதியானது, அவரைப் போன்று பல சகோதரிகள் பல கொடூரங்களை அனுபவித்து எமக்காக
மாண்டுள்ளார்கள். இந்த நாகரீக உலகில் எவர்க்கும் நடந்திராத கொடூரம். அதற்கு நீதி வேண்டும் என நினைப்பவர்கள் இந்தப் போராட்டத்திற்கு வாருங்கள், என்னுடைய போராட்டம் மட்டும் எதையும் சாதிக்காது, இந்த ஒரு போராட்டம் மட்டும் எதையும் சாதிக்காது, ஆனால் உங்கள் ஒவ்வொருவருடைய வருகையுமே அங்கே நீதியை பெற்றுத்தரும், உங்கள் ஆதரவுடன் நீதியின் கதவுகளை திறப்போம் என்ற நம்பிக்கையுடன் தொடர்கின்றேன்........

 10 Downing St, London SW1A 2AA, station:
westminster
04.11.2013
5.30 pm நன்றியுடன்
சு.பரமேஸ்வரன
« PREV
NEXT »

No comments