ஊடகவியலாளர்களுக்கு மோசமான நாடாக இலங்கை மாற்றமடைந்து செல்வதாக கபே என்னும் தேர்தல்
கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஊடக சுதந்திரம் குறித்த
பல்வேறு சுட்டெண்களில் இலங்கை மிகவும்
பின்தங்கிய நிலையில் காணப்படுவதாகக்
குறிப்பிட்டுள்ளது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகள்
பிரயோகிக்கப்பட்டு வருவதாக
கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்
ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன்
தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் சுதந்திரமான முறையில்
கடமையாற்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். அண்மையில் அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் நாடு கடத்தப்பட்ட சம்பவம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இலங்கை அரசியல் சாசனத்தின் 14ம் சரத்திற்கு புறம்பான வகையில் ஊடகவியலாளர்கள்
நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment