Latest News

November 26, 2013

யாழில் தொடரும் மகிந்தவுக்கு எதிரான தாக்குதல்கள்
by admin - 0

யாழ்.குடாநாட்டினில் தொடரும் மஹிந்த கட்அவுட்கள் கிழிப்பு மற்றும் தீவைப்பின் தொடர்ச்சியாக இன்று தெல்லிப்பளை கிழக்கினில் கட்அவுட்
ஒன்று தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள சூடுவெந்த இடம் எனும் கிராமத்திலுள்ள நாமகள் வாசிகசாலை அருகாக நாட்டப்பட்டிருந்த மஹிந்த கட்அவுட்டே தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு படையினர் குவிக்கப்பட்டு அருகாகவுள்ள
விளையாட்டு மைதானத்தினில் விளையாடிக்கொண்டிருந்த  இளைஞர்கள்
மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் அக்கட்அவுட் அண்மைய
மழையினாலேயே வீழந்ததாக  குறித்த இளைஞர்கள் தெரிவித்த காரணத்தை ஏற்க மறுத்த படையினர் அவர்களை அடித்து நொருக்கியுள்ளனர். இதில் சிலர்
காயங்களிற்குள்ளானதாக கூறப்பட்ட போதும் இரவு அப்பகுதிக்கு வெளியார் செல்ல அனுமதிக்கப்படாமையினால் மேலதிக தகவல்கள் ஏதும் வெளியாகியிருக்கவில்லை. முன்னதாக யாழ்.நகரப்பகுதியினில் கடந்த ஒரு சில வாரங்களினுள் மட்டும்
ஜந்திற்கும் அதிகமான தீவைப்பு மற்றும் தாக்கி சேதப்படுத்தல் காரணமாக மஹிந்தவின்
கட்அவுட்கள் சேதமடைந்திருந்தன.இறுதியாக யாழ்.நகரின் புனித பத்திரிசிரியார்
தேவாலயம் மற்றும் ஆயர் இல்லத்திற்கு அருகாகவிருந்த கட்அவுட் இரவோடிரவாக
தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.எனினும் பின்னர் படையினர் அக்கட்அவுட் படையினரால் அருகாகவுள்ள முகாமிற்கு எடுத்து செல்லப்பட்டுவிட்டது. இந்நிலையினிலேயே தற்போது தெல்லிப்பளை கிழக்கினில் கட்அவுட்
ஒன்று தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments