Latest News

November 01, 2013

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் தற்போதைய நிலை
by admin - 0

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தினரது பாரிய படை முகாம் அமைக்கப்பட்டுவருவதையும்
முள்வேலியால் சுற்றி அடைக்கப்பட்டுவருவதையும் படங்களில் காணலாம்.மாவீரர் துயிலும் இல்லம் சிதைத்து அழிக்கப்பட்டதன் பின்னர் மாவீரர் துயிலும் இல்லங்களில் எருக்கலை பெருமளவில் முளைத்துக் காணப்பட்டது. மாவீரர் துயிலும் இல்லங்களைச் சிரமதானம் மூலம் துப்பரவு செய்வதாக
பிரதேச சபைகள் தீர்மானம் எடுத்ததைத் தொடர்ந்து இராணுவத்தினர் மாவீரர் துயிலும் இல்லங்களில் சென்று அக்காணிகளை முட்கம்பி வேலி போட்டு அடைத்து பாரிய படை முகாம்களை அமைத்து வருகின்றார்கள். மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு கிட்ட எவரும் போகமுடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளமையும் இதனால் மாவீரர்களது பெற்றோர்கள் மிகுந்த கவலையும் சினமும் கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.




« PREV
NEXT »

No comments