இளம் பெண்ணொருவரைக் இராணுவ புலனாய்வாளர்கள் இருவர் கடத்த முயன்ற சம்பவமொன்று யாழில் இன்று இடம்பெற்றுள்ளது. அச்சுவேலியிலிருந்து யாழ். ஆஸ்பத்திரி வீதி ராஜாவின் தோட்டத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற 21 வயது நிரம்பிய இளம் யுவதி ஒருவரை 500-1173 என்ற நீல நிற ஹயஸ் வாகனத்தில் பின் தொடர்ந்த இரு வாலிபர்கள், தமது தொலைபேசி இலக்கத்தை எழுதி 2 முறை அப்பெண் மீது எறிந்துள்ளார்கள். தொடர்ந்தும் அப்பெண்ணை பின்தொடர்ந்த இருவரும் அவரது உறவினர் வீட்டின் முன்னால் வைத்து கடத்த முற்பட்டவேளை, அப்பெண் சத்தமிட்டு கத்தவே பெண்ணின் உறவினர்களும் அயலவர்களும் சேர்ந்து அப்பெண்ணை காப்பற்றி வாலிபர் இருவரையும் பிடித்துள்ளனர். உடனே அவ் வாலிபர்கள் இருவரும் யாழ் காவல்
நிலையத்துடன் தொடர்பு கொண்ட
சிறிது நேரத்தில் 500 இராணுவத்தினர்
வந்து கிராமத்தை சுற்றி வளைத்து மக்களிடமிருந்து இருவரையும் காப்பற்றி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment