Latest News

November 22, 2013

பிரச்சனையே வேண்டாம்! களத்தில் இறங்கிய விஜய்!
by admin - 0

ந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் புஸ்ஸ்ஸ்... என போய்விட, தற்போது தமிழ்த்திரையுலகிலும், ரசிகர்களிடையேயும் கோச்சடையான், ஜில்லா, வீரம் படங்களின் ரிலீஸுக்கான கொண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது.சாதாரணமாக ஒரு மாஸ் ஹீரோவின் படத்திற்கே தியேட்டர் கிடைக்காமல் பல பிரச்சனைகள் ஏற்படுகிற காலத்தில் மூன்று ஹீரோக்களின் படம் எப்படி எந்த பாதிப்பும் இல்லாமல் ரிலீஸாகும் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறது கோடம்பாக்கம். தீபாவளிக்கு அஜித் திரைப்படத்திற்கு தியேட்டர் கிடைக்காமல் ஒருநாள் முன்பே ரிலீஸ் செய்யும் நிலை ஏற்பட்ட மாதிரி தன் படத்திற்கு ஏற்பட்டுவிடாமல் இருக்க இப்பொழுதே தியேட்டர்களை புக் செய்யுமாறு விஜய்யிடமிருந்து ஆர்டர் வந்துவிட்டதாம்.


தென் தமிழக மாவட்டங்களிலிருக்கும் பெரும்பாலான தியேட்டர்களை ஜில்லா டீம் புக் செய்துவிட்டதால் மற்ற தியேட்டர் அதிபர்கள் தானே சென்று ஜில்லா திரைப்படத்தை வாங்கிவருகிறார்களாம். விஜய் படங்களுக்கு தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வருவதால் இந்த முறை எந்த பிரச்சனையும் வராமல் படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் முன்யோசனைகளுடன் செயல்படுகிறதாம் விஜய் தரப்பு
« PREV
NEXT »

No comments