Latest News

November 30, 2013

வட­ப­குதி மீன­வர்­களின் பிரச்­சினை தொடர்பில் கூட்­ட­மைப்­பு இந்தியாவுடன் பேச முனைவதில்லை -அமைச்சர் டக்ளஸ்
by admin - 0

வட­ப­குதி மீன­வர்­களின் பிரச்­சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் தமிழ் நாட்­டு­டனோ, இந்­திய அர­சு­டனோ பேசி தீர்க்க முனை­வ­தில்லை. பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்ற கொள்­கை­யையே கடைப்­பி­டிக்­கின்­றது. என அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்தா நேற்று சபையில் தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற வரவு செலவு திட்ட விவா­தத்தில் உரை­யாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்தா இதனைத் தெரி­வித்தார்.
சபையில் அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
நாட்டில் பண­வீக்கம் குறை­வ­டைந்து பொரு­ளா­தாரம் மஹிந்த சிந்­தனை அடிப்­ப­டையில் சிறப்­பான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. வடக்­கிலும் அபி­வி­ருத்­திகள் ஜனா­தி­ப­தியால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.
சில எம்.பி.கள் வடக்கில் எதுவும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்­லை­யென்­கின்­றார்கள். ஆனால் இந்த வரவு செலவுத் திட்­டத்தில் ஏனைய மாகாண சபை­க­ளை­விட வட மாகாண சபைக்கு அதி­க­ளவு நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.
பொது­ந­ல­வாய மாநாடு, வர்த்­தக மாநாடு நாட்­டுக்கு வெற்­றியை பெற்­றுக்­கொ­டுத்­துள்­ளது.
வடக்கில் அபி­வி­ருத்திக் குழு கூட்­டத்தை நடத்­தினோம். ஆனால் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் கலந்து கொள்­ள­வில்லை. கலந்து கொண்­டி­ருந்தால் வடக்­கிற்கு ஒதுக்­கப்­பட்ட நிதி எவ்­வ­ளவு என்­பதை தெரிந்து கொண்­டி­ருக்­கலாம்.
மோதல்­க­ளுக்கு பின்னர் வடக்கில் அடிப்­படை வச­திகள் மேம்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. மன்னார், வவு­னி­யா­விலும் அபி­வி­ருத்­திகள் நடை­பெ­று­கி­றது.
கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு அபி­வி­ருத்­திகள் தொடர்­பாக தெரியும் ஆனால் மக்­களை திசை திருப்்­பவே மறைக்­கின்­றனர்.
இந்த பாரா­ளு­மன்­றத்தில் மஹிந்த சிந்­த­னைக்கமைய கொள்கைகள் முன்­னெ­டுக் கப்படு­கின்­றன.
13ஆவது திருத்­தத்­திற்கு அமைய சத்­தியப் பிர­மாணம் செய்­த­வ ர்கள் அதனை பின்­பற்ற வேண்டும். பல காலங்­க­ளாக தொடர்ந்த பிரச்­சி­னையை உட­ன­டி­யாக தீர்க்க முடி­யாது.
மஹிந்த சிந்­த­னையை நட த்துவதற்கு மாவட்ட குழுகள் ஊடாக முன்­னெ­டுக்­கின்றோம். ஆனால் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் கலந்து கொள்­ள­வில்லை.
வடக்கு மீன­வர்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக கூட்­ட­மைப்­பினர் தமி­ழக அரசு, இந்­திய அர­சுடன் பேசித் தீர்க்க முயற்­சிக்­க­வில்லை.
எமது மக்கள் தமது சொந்த நிலங்­களில் வாழ்­வதை கூட்­ட­மைப்­பினர் விரும்­ப­வில்லை. பிரச்­சி­னை­களை தீர்க்­காது அதனை அதி­க­ரித்து, அர­சியல் செய்­வதே கூட்­ட­மைப்பினரின் கொள்ளையாகும் ம-ஹிந்த சிந்தனையைப் போன்று கூட்டமைப்பினருக்கும் சிந்­தனை உண்டு. அது தான் சு.ம. சிந்­தனை, சுத்துமாத்து சிந்­த­னை­யாகும்.
எமது மக்கள் தமது சொந்த இடங்­களில் வாழ வேண்டும் அதற்­காக ஜனா­தி­பதி, அமைச்சர் பஷில், பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொ ள்வேன்.
« PREV
NEXT »

No comments