Latest News

November 11, 2013

இலங்கைக்கு சவாலான கல்லம் மெக்ரே வந்தார்! போராட்டத்தில் அரச சார்பு அணி..
by admin - 0


இலங்கை தொடர்பில் சர்ச்சைக்குரிய ஆவணப்படங்களை தயாரித்து இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை உலகம் முழுக்கப் பரவச் செய்த சனல் 4 தொலைக்காட்சியின் ஊடவியலாளர் கல்லம் மெக்ரே சற்று முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். இவருடைய வருகையை எதிர்த்து கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையின் கொலைக்களங்கள், தண்டிக்கப்படாத போர்க்குற்றம், யுத்த சூனிய வலயம் உள்ளிட்ட இலங்கை தொடர்பான ஆவணப்படங்களை கல்லம் மெக்ரே தயாரித்தமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments