இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. அக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்கக் கூடாது என மத்திய அமைச்சர்கள் நாராயணசாமி, ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment