இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் போது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் வில்லியம் ஹேக் கூறியதாவது:
இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் போதும் அதற்கு பின்னரும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக அளிக்கப்பட்ட ஒப்பதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் இதுவரை யார் மீதும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிப்பதாக உள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போதும் அதற்கு பின்னரும் இலங்கை இராணுவத்தினர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக ஐ.நா.வின் நிபுணர் குழு உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் உறுதியாக குற்றம் சாட்டியுள்ளன.
சர்வதேச சமூகத்திடம் ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் படி இலங்கை அரசு இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று வில்லியம் ஹேக் வலியுறுத்தினார்.
No comments
Post a Comment