Latest News

November 15, 2013

மனித உரிமை மீறல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இலங்கையை நிர்ப்பந்திக்க வேண்டும- கொமன்வெல்த் நாடுகளுக்கு வலியுறுத்து!
by Unknown - 0

இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்நாட்டை கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் நிர்ப்பந்திக்க வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் இயக்குநர் பிராட் அடம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பேசுகிறார்களா அல்லது மௌனமாக இருக்கிறார்களா என்று உலக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.
இலங்கையில் போரின்போது நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் வெளிப்படையாக நிர்ப்பந்திக்க வேண்டும். இல்லையெனில் சர்வதேச அமைப்பு என்ற நம்பகத்தன்மையை கொமன்வெல்த் இழந்து விடும்.

சர்வதேச விசாரணை:

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது, சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டிருப்பது குறித்து, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையர் வலியுறுத்தியிருப்பதை கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று பிராட் ெஅடம்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments