Latest News

November 13, 2013

காமன்வெல்த் மாநாடு: மொரிஷியஸ் பிரதமர் செல்லமாட்டார்
by admin - 0

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் செல்லமாட்டார் என்று அந்த. நாடு அறிவித்துள்ளது. இலங்கை, மனித உரிமைகளை மதிக்கும்
விஷயத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும்
காணப்படவில்லை என்பதால் இந்த
முடிவு எடுக்கப்பட்டது என்று பிரதமர் ராம்கூலம் மொரிஷியஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்தது. தான் இலங்கை மனித உரிமைகள் நிலவரம்
குறித்து கூர்ந்து கவனித்து வருவதாகவும்,
அங்கு மனித உரிமைகள்
மீறப்பட்டுவருவது குறித்து மிகவும் கவலை அடைந்துள்ளதாகவும் அவர்
இன்று நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தாக ,
அரசு செய்திக்குறிப்பொன்று கூறுகிறது. இதனடிப்படையில் தான் சிந்தித்து எடுத்த முடிவின்படி,
இலங்கைக்கு செல்லப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்த மொரிஷியஸ்
நாட்டின் வெளியுறவு அமைச்சர் அர்வின் பூலெல் மொரிஷியஸ்
எப்போதுமே கொள்கைகளின் அடிப்படையில்தான்
முடிவுகளை எடுத்து வந்திருக்கிறது. மொரிஷியஸ் காமன்வெல்த்
பிரகடனத்தின் அடிப்படையிலும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும்
வகையிலும், இந்த முடிவை மொரிஷியஸ் பிரதமர் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். ஆயினும், காமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு பிரதமர் போகாவிட்டாலும்,
அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், தன்னை அந்த மாநாட்டுக்குப்
போக பிரதமர் பணித்திருக்கிறார் என்றும் அர்வின் பூலெல் கூறினார். இந்த முடிவு இலங்கைக்கும் மொரிஷியஸுக்கும் இடையேயான உறவுகளைப் பாதிக்காது என்றும் அவர் கூறினார்.
« PREV
NEXT »

No comments