Latest News

November 20, 2013

58 இலட்சம் கி.கிராம் நிறையுடன் நகர்ந்த வாகனம் : பிரித்தானியாவின் மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து
by admin - 0

பிரித்தானியாவில் சுமார் 58 இலட்சத்து 598 கிலோ கிராம் நிறையுடைய பாரிய ஜெனரேட்டர் ட்ரான்ஸ்போமர் ஒன்று வீதி வழியாக சரக்கு வாகனத்தில்
எடுத்துச்செல்லப்பட்டுள்ளமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


இது பிரித்தானியாவின் மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்து என கூறப்படுகிறது. 100 மீற்றர் நீளமும் 5 மீற்றர் அகலமானதுமான ட்ரெய்லரில் (சுமார் 10 பயணிகள் பஸ்ஸுக்கு சமமானது) இந்த
ட்ரான்ஸ்போமர் டிட்கொட் மின்சார நிலையத்திலிருந்து மணிக்கு 4 மீற்றர் வேகத்தில் பிரிஸ்டலிலுள்ள
அவொன்மௌத் டொக்ஸுக்க கொண்டு செல்லப்பட்டுள்ளது.


அதிகூடுதலாக மணித்தியாலத்துக்கு 6.44 கிலோமீற்றர் எனும் வேகத்தில் மட்டுமே சென்ற இப்போக்குவரத்துக்கு 2 நாட்கள் எடுத்துள்ளது. இத்திட்டத்தினை சரக்கு போக்குவரத்து வல்லுநர்கள்
அறுவர் இணைந்து 9 மாதங்களாக திட்டமிட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் பிரிஸ்டலையடைந்த இந்த ட்ரான்ஸ்போமரை அங்கிரிருந்து கடல் வழியாக கொட்டம் மின்சார நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டவுள்ளது.





இந்த ட்ரான்ஸ்போமர் ஒக்ஸ்போர்ட்ஷயரிலுள்ள டிட்கொட் மின்சார நிலையத்தில் 43 வருடங்களாக
பயன்படுத்தப்பட்டதாகும். 13 மைல் தூர பயணத்தில் சிறிய கோளாறு ஏற்பட்ட போதிலும் நெரிசல்களை எதிர்கொண்டு பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



« PREV
NEXT »

No comments