Latest News

October 01, 2013

‘டொம்டாட்டோ’: ஒரே செடியில் மேலே ‘தக்காளி’,வேரில் ‘உருளை’ விளையும் விநோதம்
by admin - 0

லண்டன்: ஒரே செடியில் மேலே தக்காளியும், வேரில் உருளை கிழங்கும் காய்க்கும் வண்ணம் இங்கிலாந்தில் புதிய செடி ஒன்றை உருவாக்கியுள்ளனர். தாம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் பணியில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன உத்தியை தற்போது கண்டறிந்துள்ளது. அதன்படி உருளைக் கிழங்கையும், தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது.



இரு தாவரங்களின் திசுக்களையும் பிரித்து ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின் இரண்டும் ஒன்றாக ஒரே தொட்டியில் வளர்க்கப்பட்டன.

இதன் பின் சரியான நேரத்தில் தக்காளிகள் காய்க்கத் துவங்கின, வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்கும் முளைத்திருந்தது. சோதனை முறையில் மட்டுமின்றி வியாபார ரீதியாகவும் இந்த முறை வெற்றி பெற்றுள்ளது.
மேலும், இதில் விளையும் காய்கறிகள் மிகுந்த சுவையுடன் இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.


« PREV
NEXT »

No comments