Latest News

October 07, 2013

ஜனாதிபதி முன்னிலையில் சி.வி. பதவியேற்றார்
by admin - 0

வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில்
அலரிமாளிகையில் வைத்து இன்று முற்பகல் 9.30 மணியளவில் தமிழில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். முதலில் வட மாகாண சபை உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட சி.வி.விக்னேஸ்வரன், அதனைத் தொடர்ந்து வட மாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம்
செய்துகொண்டார். இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரனின் குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அரச தரப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பிரதமர் டீ.எம்.ஜயரத்ன, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, மைத்திரபால சிறிசேன, திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாவுல்லா, ஏ.எச்.எம்.அஸ்வர், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும்,
பிரபா கணேசன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
« PREV
NEXT »

No comments