Latest News

October 07, 2013

இராஜினாமா செய்யும் தீர்மானத்தை கைவிட்டார் செல்வம் எம்.பி
by admin - 0

டெலோ அமைப்பின் தலைமைப் பதவியை
இராஜினாமா செய்யும் தீர்மானத்தை பலருடைய வேண்டுகோள்களை ஏற்று கைவிடுவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைச்கலநாதன் தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'வடமாகாண சபையில் வன்னி மாவட்டத்திற்கென அமைச்சுப் பதவியொன்று வழங்குவதற்கான
நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எனினும் கட்சித் தலைமை அந்தப் பதவியை யாழ்.மாவட்டத்திற்கு வழங்குவதற்குத் தீர்மானித்திருந்தது. கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்ட போதிலும் வன்னி மாவட்ட மக்களுக்குப் பொறுப்பு கூறும் வகையில்
தலைமைப் பதவியை ராஜிநாமா செய்ய உத்தேசித்திருந்தேன். ஆனால், எனது இந்த நடவடிக்கை கட்சியின் செயற்பாட்டுக்கும் மாகாண சபையின் செயற்பாடுகளுக்கும்
ஆரோக்கியமாக இருக்கமாட்டாது என்று சுட்டிக்காட்டி எனது இராஜினாமா யோசனையைக் கைவிடுமாறு பலரும் கேட்டுக் கொண்டதையடுத்து அந்தக் கோரிக்கையில் உள்ள
நியாயத்தன்மைமையை உணர்ந்து எனது இராஜினாமா தீர்மானத்தை கைவிட்டுள்ளேன்' என்று  நாடாளுமன்ற
உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments