அரசியல் பிரச்சினை தொடர்பான விடயங்களை ஆராய புதுடில்லி வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இந்தியா அழைத்துள்ளதென தமிழ் தேசிய
கூட்டமைப்பு நேற்று புதன்கிழமை கூறியது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் புதிய முதலமைச்சருக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். வடக்குக்கு விஜயம் செய்த குர்ஷித்துடன் மீனவர் பிரச்சினை பற்றி வடமாகாண முதலமைச்சர் பிரஸ்தாபித்ததாக சம்பந்தன் தெரிவித்திருந்தார். முதலமைச்சரும் இந்த பிரச்சினையை குர்ஷித்திடம் பேசியுள்ளர். ஏதோ ஒன்று நடைபெறமென நான் நினைக்கின்றேன் என சம்பந்தன் கூறினார். இந்நிலையில், வடமாகாண முதலமைச்சர் இந்தியாவுக்கு எப்போது செல்வாரென அறிவதற்கு அவருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.
No comments
Post a Comment