Latest News

October 09, 2013

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் சித்திரவதையின் பின் விபத்து என்ற போர்வையில் கொல்லப்பட்டார்
by admin - 0

500 புகலிடக் கோரிக்கையாளர்களை கப்பல் மூலம் கனடாவுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக CTV நிறுவன ஆவண செய்தியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நாடு கடத்தப்பட்டதன் பின் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி சுமார் ஒரு வருடகாலம் தான் சிறை வைக்கப்பட்டிருந்ததாக சத்தி எனப்படும் சத்தியபவன் ஆசீர்வாதம் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் பைப்புகளால் தாக்கப்பட்டு, உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்ததாக பாதிக்கப்பட்ட சத்தியபவன் ஆசீர்வாதம் தனது கனேடிய சட்டத்தரணியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

'என் உடலில் தண்ணீர் தாகம் ஏற்பட்டு நான் தண்ணீர் கேட்டபோது அவர்கள் என்னை அடித்தனர், எனது கண்ணை கட்டி கைகளையும் கட்டி போட்டனர், நிர்வாணமாக்கப்பட்டேன், குளிர்ந்த, இருண்ட அறையில் அடைக்கப்பட்டேன். அந்த நாட்களை என்னால் எண்ண முடியவில்லை.' என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் சத்தி அண்மையில் இடம்பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்ததாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். 
2010ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம்; 500 புகலிடக் கோரிக்கையாளர்கள் சன் சீ கப்பலில் கனடாவை சென்றடைந்தனர். 

இவர்களை சட்டத்துக்கு புறம்பாக கனடாவுக்குள் அழைத்துச் சென்ற குற்றச்சாட்டில் சத்தி கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், இலங்கை சிறையில் வைத்து சத்தியபவன் ஆசீர்வாதம் மீது சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
« PREV
NEXT »

No comments