Latest News

October 09, 2013

விஜயின் ஜில்லா படத்தின் கதை இதுதான்!
by admin - 0

 
முருகா படத்தினைத் தொடர்ந்து நீண்ட இடைவெளியின் பின்னர் இயக்குநர் நேசன் இயக்கும் புதிய படம் விஜயின் ஜில்லா. விஜயின் தலைவா திரைப்படம் பிரச்சினைகளால் துவண்டு போனதன் பின்னர் வெளியாகவுள்ள படம் இந்த ஜில்லா. இதனால் தளபதி ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இப்படத்தின் கதை இதுதான் என ஒரு கதை வெளியாகியுள்ளது. அதாவது மார்பியா கும்பல் தலைவரின் மகன் ஒருவன் பொலிஸ் அதிகாரியாக உருவாவதே படத்தின் ஒரு வரிக் கதையாம். கதையிலிருந்து நீங்கள் எதிர்பார்ப்பது போலவே பொலிஸாக விஜய் நடிக்க மார்பியா கும்பலின் தலைவனாகவும் விஜயின் அப்பாகவும் மோகன்லாலும் அம்மாவாக பூர்ணிமாவும் நடிக்கின்றனர் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் நாயகியாக நடிக்கும் காஜல் ஆகாவாலுக்கு விஜய்க்கு இணையாக சண்டைக்காட்சிகள் என முக்கியதுவம் அளிக்கப்பட்டுள்ளதாம். தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இப்படம் அஜித்தின் வீரன் படத்துடன் அடுத்த வருட பொங்கல் ரேஸில் குதிக்கும் என எதிர்பார்கக்கப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments