நாட்டில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை விட்டுவிட்டுப் பெய்யும்
என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. பருவகாலங்களுக்கு இடையிலான காலத்துக்கு நாம் செல்வதனால் இந்த வளிமண்டலவியல் குழப்பங்கள் உண்டாகியுள்ளன. நாட்டின் பல பகுதிகளிலும் குறிப்பாக கரையோரப் பகுதிகளான தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பகுதிகளில் மாலை வேளைகளில் மழை விட்டுவிட்டுப் பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.காரியவசம் தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களுக்கு மாலை வேளைகளில் நாடு முழுவதும் மழை பெய்யலாம் எனவும் அவர் கூறினார்.
No comments
Post a Comment