Latest News

October 04, 2013

ஜனாதிபதி முன்னிலையிலேயே விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம்
by admin - 0

ஓய்வுபெற்ற நீதியரசரும் வட மாகாண சபையின் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ளவருமான  சி.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் வட மாகாண சபையின் முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.   

இவரது பதவியேற்பு நிகழ்வு  அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
« PREV
NEXT »

No comments