Latest News

October 08, 2013

வெளியானது கோச்சடையான் பாடல் : கொண்டாடும் ரசிகர்கள்
by admin - 0



சுப்பர் ஸ்டார் ரஜனி காந்த் நடிப்பில் உருவாகிவரும் கோச்டையான் திரைப்படத்தின் ஒரு பாடல் யூடியூப்பில் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது.கோச்சடையான் படக் குழுவினர் ஏற்கெனவே அறிவித்தது போல பாடல் ஒன்றினை இன்று யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.

எங்கே போகுதோ வானம்... என ஆரம்பிக்கும் இப்பாடலினை எஸ்.பி.பி. பாடியுள்ளார். மிக அருமையான வரிகளால் அலகங்கரித்திருக்கிறார் வைரமுத்து. அதேபோல ஏ.ஆர். ரஹ்மான் தன் மந்திர இசையால் பாடலுக்கு உயிரூட்டியுள்ளார்.

சௌந்தர்யாக இயக்கத்தில் ரஜினி - தீபிகா படுகோனே நடித்துள்ள இத்திரைப்படம் 3டி மோஷன் கெப்சர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் படமும் ரஜினியின் பிறந்தநாளன்று வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

இதேவேளை கடந்த மாதம் வெளியான கோச்டையான் படத்தின் ட்ரெய்லர் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் இப்பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளதை சமூகவலைத்தளங்களில் காணமுடிகின்றன.

ட்ரெய்லர் 4 மில்லியனுக்கு அதிகமான தடவைகள் யூடியூப்பில் பார்க்கப்பட்டு சாதனைபடைத்ததைப் போல இந்த ஒரு பாடலும் யூடியூப்பில் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்துள்ளது.

வெற்றி சங்கொலி என்றுமே ஓயாது..

« PREV
NEXT »

No comments