Latest News

October 30, 2013

அமைதி வழி போராட்டங்கள் தோல்வி ஆயுதத்தை கையில் எடுத்த தமிழகம்???
by admin - 0

கொமன் வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்தியா கலந்து கொள்ளும் என்ற அறிவிப்புகள் வெளியாகிவருகின்றன. பிரதமர் செல்கின்றாரோ இல்லையோ நான் கண்டிப்பாக போவேன் என வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்திஸ் திமிராக அறிவித்திருந்தார். அதனை வழிமொழிவதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்கள்
இந்தியா கலந்து கொள்ளும் என கூறிவருகின்றார்கள். இந்நிலையில் மன்மோகன் சிங் மாநாட்டு ஆரம்ப நிகழ்வில்
பங்கேற்று திரும்பிவிடுவார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் தமிழகத்தில்
கொதி நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று நல்லிரவு 12 மணியளவில் சென்னை மயிலாடுதுறையில் உள்ள தலைமை தபால்
நிலையத்தின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்தப்
பகுதியில் அமைந்துள்ள மற்ற தபால் நிலையத்திற்கும் பெற்றோல்
குண்டு வீசப்பட்டுள்ளது. தபால் நிலைய ஜன்னல் வழியாக எறியப்பட்ட பெற்றோல் குண்டுகள் சத்தத்துடன்
வெடித்து எரிந்துள்ளன. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த
காவலர்களும் தீயணைப்பு பிரிவினரும் தீயை அணைத்துள்ளார்கள். இந்த அசம்பாவிதத்தில் அலுவலகததில் இருந்த தளபாடங்கள் கோப்புகள்
எரிந்துள்ளது. இரண்டு தபால் நிலையத்தின் மீதும் 19 பெற்றோல் குண்டுகள்
வீசப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். தபால் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவான
காட்சிகளை வைத்து பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த
நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். அமைதிவழியில் தமிழகத்தில் எழுப்பப்பட்ட எதிர்ப்புக் குரல்கள் இந்திய மத்திய
அரசால் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதாலேயே இந்த வன்முறைச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக
காவல்துறையினர் தமக்குள் பேசிக்கொண்டதாக அறிய முடிகின்றது. மத்திய அரசு அலுவலகமான தபால் நிலையம் பெற்றோல்
குண்டு வீச்சிற்கு உள்ளாகியுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மத்திய
அரசு அலுவலகங்களும் தொடர்ந்து இலக்கு வைக்கப்படலாம் என்ற பதற்றம்
ஏற்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாக சென்னையில் உள்ள சிறிலங்காத் தூதரகம் மற்றும் தமிழகத்தில் உள்ள சிறிலங்கா நிறுவனங்களிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments