Latest News

October 27, 2013

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு: இந்திய ஊடகம்
by admin - 0

கச்சத்தீவுக்கு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு,

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், கச்சத்தீவு அருகில் தங்கள் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

மீனவர்களை சிறைபிடித்துச் செல்வதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்வதால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

மீனவர்களின் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், தமிழக-இலங்கை மீனவர் கூட்டமைப்புகளின் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது.

இந்தநிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலர் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் மீன்பிடி படகு சேதம் அடைந்தது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள், உடனடியாக கரை திரும்பினர்.

இந்த சம்பவத்திற்கு ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
« PREV
NEXT »

No comments