கே.பியை இலங்கை அரசு கைதுசெய்து கொழும்புக்கு கொண்டுசென்றதுபோல, லண்டனில் இயங்கும் சில அமைப்புகளின் தலைவர்களை இலங்கைக்கு கொண்டுவரவேண்டும் என்று மேல்மாகணசபை அமைச்சர் உதய காமினபில தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இயங்கும் சில அமைப்புகள், புலிகளுக்கு ஆதவராவ இயங்குவதாகவும் அதனால் இலங்கைக்கு பாரிய குந்தகம் ஏற்படுவதாகவும் இவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக உதய காமினபில லண்டன் மற்றும் பிரான்சில் இயங்கும் தமிழ்ர் ஒருங்கிணைப்புக் குழுவை(TCC) சாடியுள்ளார். குறித்த இந்த அமைப்பின் தலைவர்களை இலங்கைக்கு கொண்டுவரவேண்டும் என்றும், அவர்களை சிறையில் அடைக்கவேண்டும் எனவும் காரசாரமான கருத்துக்களை இவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் செயல்படும் அமைப்புகள் சிலவற்றை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். அதாவது TCC என்று அழைக்கப்படும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, BTF என்று அழைக்கப்படும் பிரித்தானிய தமிழர் பேரவை, TGTE என்று அழைக்கப்படும் நாடு கடந்த அரசு, மற்றும் GTF என்று அழைக்கப்படும் உலகத் தமிழர் பேரவை என்பனவே அவை ஆகும். இந்த அமைப்புகள் புலிகள் எதனை செய்ய முற்பட்டார்களோ அதனையே செய்துவருவதாகவும், ஐரோப்பாவில் இவர்கள் மிகவும் பலம்பொருந்தி இருப்பதாகவும், சிங்கள கடும்போக்காளரான உதய காமினபில தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment