வடமாகாண தேர்தலில் போட்டியிட்ட கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் ஆகிய எங்களின் வெற்றிக்கு ஆதரவளித்த, புலம்பெயர் உறவுகளுக்கும் அனைத்து இணையத்தள ஊடகங்களுக்கும் எமது உளப்பூர்வமான நன்றியறிதல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
முள்ளி வாய்க்காலில் அழிக்கப்பட்டதால் தோற்கடிக்கப்பட்ட சமூகம் என இலங்கை அரசால் எள்ளி நகையாடப்பட்ட நாம் இன்று அவர்களுக்கு வீழ்ந்து போகும் இனம் நாம் அல்ல என்பதனை இத் தேர்தல் மூலம் தெட்டத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம். எம்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்ததால் இப் பெரு வெற்றியினைச் சாதிக்க முடிந்தது என்பது தெட்டத் தெளிவான ஒன்று.
நடைபெற்று முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் கிளிநொச்சி வாழ் மக்கள் உவகையுடன் வாக்களித்து எம்மை வெற்றி பெறச் செய்த அதேவேளை, தொடர்பாடல் ஊடகங்கள் ஊடாக வட மாகாணத்திலுள்ள தமது உறவுகளுடன் தொடர்பு கொண்டு பரப்புரை செய்ததன் மூலமும் இவ் வெற்றிக்குப் பெரும்பங்களிப்பினை எமது புலம்பெயர் உறவுகள் ஆற்றியிருந்தனர்.
அத்துடன் சர்வதேச ரீதியாக எமது இனத்தின் குரலை எடுத்துச் சென்று எமது வெற்றிக்குத் தோள் கொடுத்த பெருமை புலம்பெயர் மக்களையும் அனைத்து புலம்பெயர் இணையத் தள ஊடகங்களையும் சாரும்.
ஆகவே, இத் தேர்தல் வெற்றிக்கு அனைத்து வழிகளிலும் ஆதரவளித்த எம் தமிழ் புலம்பெயர் உறவுகளுக்கும், சகல இணையத்தள ஊடகங்களுக்கும் ஒட்டுமொத்த கிளிநொச்சி வாழ் மக்கள் சார்பில் எமது உளமார்ந்த நன்றியுணர்வினை வெளிப்படுத்துவோடு, எம்மக்கள் எமக்குத் தந்த ஆணையினை மதித்து அதற்கேற்ப எமது பணியினை மேற்கொள்வோம் எனத் தெரிவிக்கிறோம்.
இவ்வண்ணம்
மாகாண சபை உறுப்பினர்கள்
ப.அரியரத்தினம்
த.குருகுலராசா
சு.பசுபதிப்பிள்ளை
No comments
Post a Comment