Latest News

October 19, 2013

இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என இந்தியாவே வலியுறுத்தியேது - தூதரக அதிகாரிகள் தகவல்
by Unknown - 0

கடந்த 2011ம் ஆண்டு கொமன்வெல்த் மாநாடு அவுஸ்திரேலியாவில் நடந்தபோது அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்த வலியுறுத்தியதே இந்தியா தான் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்பில் அடுத்த மாதம் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பல கட்சிகள், தமிழ் அமைப்புகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள்.
ஆனால் மத்திய அரசு இதுவரை தனது நிலையை தெளிவாக தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இது குறித்து தூதரக அதிகாரிகள் கூறுகையில்,
கடந்த 2011ம் ஆண்டு கொமன்வெல்த் மாநாடு நடந்த போது அடுத்த மாநாட்டை கொழும்பில் நடத்த வேண்டும் என்று இந்தியா தான் இங்கிலாந்து, கனடா மற்றும் அவுஸ்திரேலியாவிடம் போராடியது என்றனர்.
கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் முடிவு எடுப்பார் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments