Latest News

October 04, 2013

போர்க்குற்றங்களை மறைக்கும் தோல்வியான முயற்சியில் இலங்கை - கெல்லம் மெக்ரே
by Unknown - 0

நேபாளத்தில் நடைபெறும் தெற்காசிய திரைப்பட விழாவில் தமது திரைப்படங்கள் திரையிடப்படுவதை தடுக்கும் தோல்வியான முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை தொடர்பில், இலங்கையின் கொலைக்களம் மற்றும் போர் தவிர்ப்பு வலயம் ஆகிய விவரணப்படங்களின் தயாரிப்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு தாம் உடந்தையாக இருந்தமைக்கான உண்மையை மறைக்க இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக அந்த படங்களில் இயக்கனர் கெல்லம் மெக்ரே தெரிவித்தார்.
இலங்கையின் கொலைக்களம் மற்றும் போர் தவிர்ப்பு வலயம் ஆகியவற்றின் மூலம் நாம் வெளியிட்ட போர் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான தீவிரமான குற்றச்சாட்டுக்களை அடுத்து அந்த குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கும், பொதுநலவாயத்தின் சில உறுப்பினர்களும் உறுதியளித்தது.
உலக நாடுகளுக்கு சென்று எமது விவரணப்படங்களை தடுக்க பல முயற்சிகளை மேற்கொள்வது நடைமுறையில் இருந்தாலும் இந்த குற்றங்களின் ஆதாரங்களை எவராவது காண்பதை தடுக்க முடியாது.
நீண்டகாலத்திற்கு அவர்களால் வெற்றியடைய முடியாது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
போர் தவிர்ப்பு வலயம் திரைப்படம் மலேசியாவில் திரையிடப்படவிருந்த நிலையில் அதனை இலங்கை அரசின் கோரிக்கைக்கு அமைய மலேசிய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில் போர் தவிர்ப்பு வலயம் உள்ளிட்ட இலங்கை சம்பந்தமான மேலும் இரண்டு விவரணப்படங்களை தெற்காசிய திரைப்படவிழாவில் திரையிட திட்டமிட்டிருந்த நிலையில் அதனை நிறுத்துமாறு நேபாள அதிகாரிகள் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்திருந்தனர்.
« PREV
NEXT »

No comments