ஹட்டன் நகர வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் டன்பார்,பண்டாரநாயக்க பிரதேசத்தை சேர்ந்த கே.டீ.பி. மானல் விஜயரத்ன என்ற வர்த்தகரே இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வர்த்தகர் நேற்று புதக்கிழமை கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தகரிடம் இனந்தெரியாத நபர்கள் 2 வருடகாலமாக 10 இலட்சம் கப்பம்கோரி குறித்த வர்த்தகரை மிரட்டியுள்ளனர்கள். ஆகையால் வர்த்தகர் மிரட்டல்காரர்களுக்கு பயந்து கடந்த இரண்டு வருடகாலமாக கப்பம் கொடுத்து வந்துள்ளார்.
இதுவரைக்கும் நான்கரை இலட்சம் ரூபாவை அந்த வர்த்தகர் கப்பமாக கொடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அந்த இனந்தெரியாத நபர்கள் வியாபாரியிடம் 1,50,000 கப்பம் கேட்டு நேற்றும் மிரட்டியுள்ளார்கள். இவரிடம் பணம் இல்லாத காரணத்தால் இவரின் நண்பனிடம் 1,50,000க்கு காசோலை ஒன்றை வாங்கி குறித்த நபர்களுக்கு கொடுப்பதற்காக சென்றபோதே அவர் கடத்தப்பட்டுள்ளார் என்றும்; தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை வானில் நேற்று புதன்கிழமை மாலை 3 மணியளவில் வந்தவர்களே அந்த வர்த்தகரை தாக்கி கண்களை கட்டி வெள்ளை வேன் ஒன்றில் ஏற்றிசென்று துன்புறுத்தியுள்ளனர்.
வர்த்தகரான தனது கணவனை காணவில்லை என்று அவரது மனைவி ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியிருந்த நிலையிலேயே குறித்த வர்த்தகரை ஹட்டன்- பொகவந்தலாவை பிரதான வீதியில் டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அண்மித்த பகுதியில் வைத்து மக்கள் மீட்டுள்ளனர்.
அதன் பின்னர் அவரை டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Post a Comment