Latest News

October 03, 2013

லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை!!
by Unknown - 0

பிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான லாலூ பிரசாத் யாதவ் அவர்களுக்கு 5 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இருமுறை பிகாரின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட லாலு பிரதாச் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் குற்றச்சாட்டு காரணமாக முதல்வர் பதவியில் இருந்து 1997 ஆம் ஆண்டு விலக நேரிட்டது.இதையடுத்து, அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டிவரும்.

அப்போது அவர் தனது மனைவி ரப்ரி தேவியை முதல்வராக நியமித்தார். அவரும் 2005 வரை பிகார் முதல்வராக இருந்தார்.
மக்கள் செல்வாக்குப் பெற்ற அதே நேரம் சர்ச்சைக்குரிய தலைவராகவே லாலு பிரசாத் யாதவ் இருந்து வருகிறார்.

ரயில்வே அமைச்சராக 2004 இல் பொறுப்பேற்ற பிறகு லாலு பிரசாத் யாதவ் முன்னெடுத்த நடவடிக்கைகளை அவரின் விமர்சகர்கள் கூட பாராட்டினர். ஆனால் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு பிகாரில் பதவிக்கு வந்த பிறகு அங்கே லாலூவின் செல்வாக்கு வெகுவாக சரிந்து போய்விட்டது.

இந்தியாவில் ஊழல் பெரிய அளவில் இருந்தாலும், பெரிய தலைவர்கள் இதுபோல சிறைக்குப் போவது மிகவும் அரிது.
« PREV
NEXT »

No comments