இலங்கையில் கசினோ சூதாட்டத்தை மேம்படுத்தும் விளம்பர தூதராக செயற்படுவது தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி தலைவர் மைக்கல் கிளார்க் மீளப்பரிசீலிக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இலங்கை அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு ஒன்று இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கையில் 400 மில்லியன் டொலர் முதலீட்டில் கசினோவை மேம்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய கோடீஸ்வரர் ஜேம்ஸ் பார்க்கருடன் மைக்கல் கிளார்க் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளார்.
இதற்காக கிளாக்குக்கு பெரிய தொகை கொடுப்பனவு கிடைக்கவுள்ளது
இந்தநிலையில் அவுஸ்திரேலியாவின் தமிழ் அகதிகளுக்கான சபையின் பேச்சாளர் ட்ரேவர் கிரான்ட் தமது கோரிக்கையில் கிளார்க் கசினோ மேம்பாட்டு பணிகளில் ஈடுபடக்கூடாது என்று கேட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 40 ஆயிரம் பேரை கொலை செய்யப்பட்டு சுமார் 146 ஆயிரம் பேர் இன்னமும் காணாமல் போயுள்ள இலங்கையில் மைக்கல் கிளார்க் கசினோ சூதாட்ட மேம்படுத்தலில் ஈடுபடக்கூடாது என்றும் ட்ரேவர் கோரியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கையில் மைக்கல் கிளார்க் ஈடுபட்டால் இது மஹிந்த ராஜபக்சவின் இரத்தம் தோய்ந்த தோற்றத்தை கழுவுவதாக அமையும் என்றும் கிரான்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments
Post a Comment