இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கை உரிய நடவடிக்கை எடுக்காததை கருத்திற் கொண்டும், இலங்கையில் மோசமடைந்து வரும் அரசியல் நிலைமையை கருத்திற் கொண்டும் பிரித்தானிய பிரதமர் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என பிரித்தானிய தொழிற் கட்சியின் நிழல் வெளிவிவகார செயலாளர் டக்ளஸ் அலெக்சான்டர் தெரிவித்துள்ளார்.
டேவின் கமரூன் தனக்கு பதிலாக வேறு ஒரு அமைச்சர் ஒருவரை அனுப்பினால் தொழிற்கட்சி அவருக்கு ஆதரவு வழங்கும் என அலெக்சான்டர் தெரிவித்துள்ளார்.
கனடா இவ்வாறானதொரு முடிவை எடுத்திருப்பதாகவும், இந்தியா இது குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments
Post a Comment