Latest News

October 16, 2013

ரணிலை பதவி விலக்கும் யோசனை முன்வைப்பு - விலகுவதாக ரணில் ஒப்புக்கொண்டார்!
by Unknown - 0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய பிக்குகள் முன்னணி, சஜித் பிரேமதாஸ மற்றும் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று முற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் ஐக்கிய பிக்குகள் முன்னணி இலங்கை ராமாஞ்ஞ பீடத்தின் ஆனந்த தேரர், அதன் தேசிய அமைப்பாளர் உலப்பனை சுமங்கல தேரர் உள்ளிட்ட 12 தேரர்கள் பங்கேற்றனர்.
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேற வேண்டும் என்ற முதலாவது யோசனை முன்வைக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேற வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் ஐக்கிய பிக்குகள் முன்னணி, கட்சியின் வெற்றிக்காக பிக்குகள் முன்னணி தற்போது முன்வைத்துள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாக தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கட்சித் தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக ரணில் ஒப்புக்கொண்டார்!
கட்சித் தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒப்புக் கொண்டதாக தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 14 நாட்களுக்குள் கட்சித் தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக ஒப்புக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ரணில் ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.
அதி உயர் பீடமொன்றை அமைத்து அதன் மூலம் கட்சியை வழிநடத்துவதாக பௌத்த பிக்குகளிடம் ரணில் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
« PREV
NEXT »

No comments