இலங்கையில் இருந்து 250 கடல் மைல் தொலைவில் தென்கிழக்கு கடற்பரப்பில் இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்து வரும் படகில் உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
தினுஜ் புதா என்ற இந்த படகில் சுமார் 65 பேர் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது என்று கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இவர்களை மீட்க கடற்படையின் சாகர என்ற கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குறித்த படகு சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
No comments
Post a Comment