Latest News

September 09, 2013

இலங்கை போர் குற்றம் குறித்து ஐ.நா.வில் நவநீதம்பிள்ளை இன்று அறிக்கை தாக்கல்!
by admin - 0

ஜெனீவா: ஜெனீவாவில் இன்று தொடங்கும் ஐ.நா கூட்டத்தில் இலங்கை பயணம்
குறித்த அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை தாக்கல்
செய்கிறார். இலங்கையில் கடந்த மாதம் நவநீதம்பிள்ளை அதிகாரப்பூர்வ பயணம்
மேற்கொண்டார். யாழ்பாணம், திரிகோணமலை உள்ளிட்ட இடங்களை அவர் பார்வையிட்ட போது போரின்போது காணாமல் போனவர்களின்
உறவினர்கள் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடத்தி, மனுக்கள் அளித்தனர். தமிழ்
அமைப்பினர் உள்ளிட்டோரை சந்தித்த நவநீதம் பிள்ளை அதிபர்
ராஜபக்சேவையும் சந்தித்து பேசினார். இந்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 24 வது கூட்டம்
ஜெனீவாவில் இன்று தொடங்கி வரும் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத் தொடரை தொடங்கிவைத்து உரையாற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை,
இலங்கை உட்பட 20 நாடுகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். இலங்கை பயணத்திற்கு பிறகு அவர் தாக்கல் செய்யும் முதல் அறிக்கை இதுவாகும். மனித
உரிமை ஆர்வலர்கள்,தமிழர் அமைப்புகள், முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையிலும் இலங்கையில்
போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலை குறித்தும் நவநீதம் பிள்ளை முன்னிலைப் படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் போருக்கு பிந்தைய நிலையை மதிப்பீடு செய்ய இலங்கை அரசு அனுமதித்தற்கு அவர் பாராட்டு தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
« PREV
NEXT »

No comments