Latest News

September 08, 2013

சிரியா மீது ‘3 நாள் அதிரடி ஏவுகணைத் தாக்குதல்’ நடத்த அமெரிக்கா திட்டம்
by admin - 0

வாஷிங்டன்: சிரியா மீது 3 நாட்கள் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த மூன்று நாட்களிலும் அதி தீவிரமான தாக்குதலை சிரியா மீது நடத்த அமெரிக்க படைகள் தயாராகி வருகின்றனவாம். இந்த செய்தியை லாஸ் ஏஞ்செலஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ளது முதலில் 50 இலக்குகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கூடுதல் இலக்குகளை சேர்க்குமாறு வெள்ளை மாளிகை நிர்வாகம் அமெரிக்க ராணுவத்தைக் கேட்டுக் கொண்டுள்ளதாம்.

சிரியப் படையினர் எந்தவிதத்திலும் சுதாரிக்காத வகையில் அதிரடியாக தாக்குதலை நடத்தி முடிக்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளதாம்

அமெரிக்க விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்களை பெருமளவில் பயன்படுத்தவும், ஐந்து அமெரிக்க ஏவுகணை அழிப்பு விமானங்களும் பயன்படுத்தப்படவுள்ளனவாம்.



« PREV
NEXT »

No comments