Latest News

September 21, 2013

சுரேஷ் பிரேமச்சந்திரன் மீது இராணுவம் துப்பாக்கி பிரயோகம்-மயிரிழையில் உயிர்தப்பினார்
by admin - 0

தென்மராட்சி, வரணியில் தமிழ்
தேசியக் கூட்டமைப்பினர்
மீது இராணுவத்தினர்
கடுமையான துப்பாக்கிப்
பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இன்று மதியம்
வரணி மகா வித்தியாலத்திற்கு முன்னால்
சாவகச்சேரி பிரதேச சபையின்
உபதவிசாளரை இராணுவத்தினர்
சிறைபிடித்தனர். இவரை மீட்பதற்கு வாகனம் ஒன்றில் சென்ற
கூட்டமைப்பினர்
இராணுவத்தினரை அடித்து விரட்டினார்கள். இதற்கு பதிலடியாக 52 படையணியின் முகாம்
ஒன்றில் இருந்து துப்பாக்கிகளுடன் வெளிவந்த
இராணுவத்தினர் சராமரியாக கூட்டமைப்பினர்
மீது தாக்குதல் மேற்கொண்டனர். இந்த சம்பவத்தின் போது தெய்வாதீனமாக
எந்தவித உயிரிழப்புகளும்
ஏற்படவில்லை என்பதோடு கூட்டமைப்பின்
வாகனம் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தென்மராட்சி, வரணி பிரதேசத்தில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும்
அவரது ஆதரவாளர்கள் பயணித்த வான்
மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம்
மேற்கொண்டுள்ளனர். வரணி பிரதேசத்தில் புலனாய்வாளர்கள்
நடமாடுவதாக கிடைத்த தகவலைத்
தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்
பிரேமச்சந்திரன் தன்னுடைய ஆதரவாளர்களுடன்
சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். இதன்போது அங்கிருந்த நபர்
வரணி பிரதேசத்திலிருந்து இராணுவ
முகாமிற்குள் ஓடியுள்ளார். இந்நிலையில்
சுரேஷ் பிரேமச்சந்திரன்
அவ்விடத்திலிருந்து செல்ல
திட்டமிட்டுள்ளார். இரண்டு வான்களில் சென்ற சுரேஷ்
பிரேமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள்
தங்களுடைய வானில்
திரும்பும்போது இராணுவத்தினர்
அவர்களுடைய வானை நோக்கி துப்பாக்கிப்
பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சுரேஷ் பிரேமச்சந்திரன் பயணித்த வானுக்கும்
இராணுவ முகாமிற்கும் 100 மீற்றர் தூர
இடைவெளியில் இந்த துப்பாக்கி பிரயோகம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராணுவத்தினர் சுமார் 15 - 20
துப்பாக்கி வேட்டுக்கள்
வானை நோக்கி சுடப்பட்டதாக
தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டின்
காரணமாக வானின் கண்ணாடிகள்
உடைந்து வான் சேதமடைந்துள்ளது. வரணி மகா வித்தியாலய தேர்தல் வாக்குச்
சாவடிக்கு முன்பாக இந்த சம்பவம்
இடம்பெற்றுள்ளது. இந்நிலையில்
தற்போது வாக்குச்சாவடி நோக்கி வரும்
வாக்காளர்களை வாக்களிக்க
விடாது பொலிஸார் திரும்பிச்
செல்லுமாறு அறிவுறுத்துவதாகவும்
தெரிவிக்கப்படுகிறது. தென்மராட்சி, வரணி பிரதேசத்தில் தற்போது பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் பொலிஸார்
குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள் வாக்களிப்பு ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுஅதேவேளை, அங்கிருந்த கடைகள் அனைத்தும்
மூடப்பட்டுள்ளன.
« PREV
NEXT »

No comments