Latest News

September 18, 2013

இனஅழிப்பாளி மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிராக அணிதிரளுமாறு வட அமெரிக்கத் தமிழ் உறவுகளுக்கு நாடுகடந்த தழிழீழ அரசாங்கம் அறைகூவல்
by admin - 1

சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அமெரிக்க வருகைக்கு எதிராக, அமெரிக்க மற்றும் கனேடியத் தமிழர்களை  அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்அறைகூவல் விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த மாநாட்டில் பங்கெடுப்பதற்காக சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச நியூயோர்க் செல்லவிருக்கின்றார்.
இந்நிலையில் நியூ யோர்க்கில் உள்ள ஐ.நாசபையின் முன்னால் அணிதிரண்டு, இனஅழிப்பாளி மகிந்த ராஜபக்சவின் இரத்தம் தோய்ந்த முகத்தினை அம்பலப்படுத்துவதோடு ,தமிழர்களுக்கான நீதியினை அனைத்துலகின் முன் பொங்குதமிழென முழங்குவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் செப்ரெம்பர் 24ம் நாள் செவ்வாய்க்கிழமை, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நியூ யோர் சிற்றியில் உள்ள ஐ.நா மையத்துக்கு முன்னர் இந்த எழுச்சி நிகழ்வு இடம்பெறவுள்ளது.
கனடாவில் இருந்து மக்கள் பங்கெடுப்பதற்கான வாகன ஓழுங்குகள் குறித்து அறிந்து கொள்ள,  குறித்த  416-854-4143647-209-4100 , 647-765-4655 இந்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க வாழ் தமிழ் உறவுகள் 267-229-9211917-744-6673,917-880-0320 இந்த இலக்கங்களுடன் ஊடாக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

1 comment

Anonymous said...

'' U S can do in Benghazi - Boston why not in Colombo ..??? its means U S always helps the war Criminals( Gaddafi friend ) if not he should take to Homeland Security for interrogation to irrelevant about white Flag killing were he given assurance to special envoy for U N Secretly General for Sri lanka Mr.Vijay Nambiar about the those surrendered would be treated as POW HE SABOTAGED and its GENOCIDE .