இந்த உலகைச்சுற்றி யார் முதலில் வலம் வருகிறார்களோ! அவருக்கே மாங்கனியயன்று அறிவிக்கப்படுகிறது.
மாங்கனி தனக்கே கிடைக்க வேண்டும் என விருப்பம் கொண்ட முருகன் மயில் மீது ஏறி உலகை வலம் வருகிறான்.
விநாயகனோ மிகவும் நிதானமாக சிந்திக் கிறார். அம்மையப்பனே உலகம். ஆகையால் அம்மையப்பனை வலம் வந்தால் உலகை வலம் வந்ததற்கு ஒப்பானது என்ற முடிபுடன் அம்மை அப்பனாகிய சிவனையும் பார்வதியையும் வலம் வருகிறார்.
விநாயகரின் முடிபு ஏற்றுக்கொள்ளப்பட்டு மாங்கனி அவருக்கு வழங்கப்படுகிறது.
உலகை வலம்வந்த முருகன் பார்க்கிறான். தன் விருப்புக்குரிய மாங்கனி அண்ணனின் கையிலிருக்கிறது. போட்டியில் மோசடி நடந்து விட்டதாக வாதிடும் முருகன் கோபம் கொண்ட வனாக, ஆண்டிக்கோலத்துடன் பழநி மலைக் குச் சென்று அங்கு தனியரசு அமைக்கின்றான்.
ஒரு மாங்கனி கிடைக்கவில்லை என்பதற் காக உரிமை மீறல் நடந்துவிட்டதெனக் கோபம் கொண்டவன் முருகன். அதுவுமன்றி ஒரு மாங் கனி கிடைக்கவில்லை என்பதற்காக பழநி மலையில் வீற்றிருந்து அறுபடை வீடுகளில் ஒன்றை அமைத்து தன் திறத்தை வெளிப்படுத் திய முருகனின் திருவிளையாடலை உணர்த்து வதே நல்லூரில் இன்று காலைவேளை நடக் கும் மாம்பழத்திருவிழாவாகும்.
மாம்பழத்தை இழந்த அந்த வேலவனுக்கு இழப்பின் வலி நன்கு தெரியும். அப்படியானால் மண்ணை, மக்களை, வாழ்வை இழந்த எங்களின் இழப்பிற்கு இன்னும் அவன் பரிகாரம் தேடமால் இருப்பது ஏன்?
மாம்பழத்தை இழந்த பழநி ஆண்டிக்கு மகா அபிசேகம் நடைபெறும். மாம்பழத்தை இழந்த தால் தான் தனக்கு மகா அபிஷேகம் நடப்பதாக அவன் கருதிவிடுகின்றான்.
எல்லாம் மாப்பாணர் கொடுக்கின்ற இடம். டேய்! முருகா! எங்களுடைய பிரச்சினைக்கு ஒரு தீர்வைத்தா. அதுவரை உனக்கு மகா அபிஷேகம் கிடையாது என்று முருகனை அதட்ட வேண்டும்.
அதுமட்டுமல்ல, மாம்பழத்தை வென்ற விநா யகனுக்கே மகா அபிஷேகம் என்றும் வெருட்ட வேண்டும்.
வென்றவன் இருக்க தோற்றவனுக்கு என்ன மகா அபிஷேகம்? மாம்பழத்தை இழந்தவனுக்கு மகா அபிஷேகம் செய்தால் அவனுக்கு (எங்கள்) இழப்பின் வலி எங்ஙனம் தெரியும்?
ஆகையால், மாப்பாணர் ஒருகால் வெருட்டிப் பார்க்கட்டும். நிச்சயம் அவன் வழிக்கு வரு வான். எங்களுக்கு வழிகாட்டுவான். தீர்வு தருவான். நல்லூரானால் முடியாதது என்ன தான் இருக்கிறது!
No comments
Post a Comment