Latest News

September 14, 2013

நீச்சல் உடையில் நடிக்கவில்லை... சமந்தா
by admin - 0


கவர்ச்சியாகவே, நீச்சல் உடையிலோ தான் நடிக்கவில்லை என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். பானா காத்தாடி, ‘நான் ஈ, ‘நீ தானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சமந்தா. லிங்குசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். விரைவில் வரவிருக்கும் படமொன்றில் சமந்தா நீச்சல் உடை அணிந்து படுகவர்ச்சியாக நடித்திருப்பதாக தகவல் பரவியது.



இதையடுத்து சமந்தாவின் இணையதள பக்கத்தில் ரசிகர்கள் பலர் வருத்தம் தெரிவித்து மெசேஜ் அனுப்பினர். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சமந்தா, ‘நான் நடித்த படங்களை நீங்கள் பார்த்திருந்தால் நீச்சல் உடையில் நடித்திருப்பதாக வந்த வதந்தியை என்னிடம் கேட்டிருக்க மாட்டீர்கள். இதுபோல் வதந்தி பரப்புபவர்கள் அதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அதில் கோபத்தோடு குறிப்பிட்டிருக்கிறார் சமந்தா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகை விருது பெற்றார் சமந்தா. தெலுங்கில் பவன் கல்யாணுடன் நடித்துள்ள படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.




« PREV
NEXT »

No comments