Latest News

September 13, 2013

ரஜினியை வாழ்த்திய பள்ளி ஆசிரியை!
by admin - 0

அன்று ஆசிரியர் தின விழா. 'கோச்சடையான்' படப் பணிகளில் பிஸியாக இருக்கும் ரஜினிக்கு திடீரென தன் பள்ளி ஆசிரியை சாந்தம்மாவின் ஞாபகம் வந்தது. உடனே தன் உதவியாளரை அழைத்த ரஜினி,'சாந்தம்மாவை அடுத்த முறை கண்டிப்பாக பெங்களூர் வரும்போது சந்திக்கிறேன். அவர்களுக்கு என்ன உதவி தேவை' என்று  விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். விசாரித்துப் பார்த்ததில், வருமானம் எதுவும் இல்லாமல் குடிசையில் கணவருடன் வாழும் சாந்தம்மா, தன் தேவைக்காக மூன்று லட்சம் பணம் கேட்டிருக்கிறார். சாந்தம்மாவின் வங்கிக் கணக்கில் உடனடியாகப் பணம்
போட உத்தரவிட்டிருக்கிறார் ரஜினி. இதை அறிந்ததும் நெகிழ்ந்துபோய் இருக்கிறார் சாந்தம்மா. ''நான் சிவாஜிராவுக்கு 5 முதல் 7-ம் வகுப்பு வரை பாடம் நடத்தினேன். படிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் நிறைய சேட்டை பண்ணுவான். அவனோட கையெழுத்து நல்லா இருக்கும். அப்பவே இவனோட தலையெழுத்தும் நல்லா இருக்கும்னு நினைப்பேன். அதுமாதிரியே அவன் யாரும் நினைச்சுப் பார்க்க முடியாத உயரத்துல இருக்கான். நான் எவ்வளவு கேட்டாலும் தருகிற நிலைமையில் அவன் இருந்தாலும், எனக்கு என்ன தேவையோ அதைக் கேட்டேன்... கொடுத்திருக்கான். மகராசன் இன்னும் நல்லா இருக்கணும். ஆண்டவன் அவனுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கணும்" என்று உருக்கமாகப் பேசி இருக்கிறார் சாந்தம்மா.
« PREV
NEXT »

No comments