Latest News

September 01, 2013

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை திறந்து வைப்பார் ஜெயலலிதா?
by admin - 0

தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவில் 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
முள்ளிவாய்க்காலில் உயிர்த்தியாகம் செய்த, தமிழர்கள் நினைவாக, தஞ்சாவூர் விளார் கிராமத்தில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நினைவுச்சின்னத்துக்கு அருகில், தமிழ் அன்னையின் சிலை ஒன்றும் நிறுவப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்க வேண்டும் என்று கோரி, ஈழத்தமிழர் ஆதரவு இயக்கத்தின் சார்பில் அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு சின்னத்தை திறந்து வைப்பதன் மூலம், உலக தமிழர்களின் அன்பை பெற முடியும் என்பதாலும், ஈழத்தமிழர் ஆதரவு வாக்குகள், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு கிடைக்கும் என்பதாலும், முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்ன திறப்புவிழாவில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்க வாய்ப்புகள் இருப்பதாக, அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
« PREV
NEXT »

No comments