Latest News

September 02, 2013

மீனவர்களிடம் இறால் கொள்ளை : இலங்கை கடற்படை அட்டூழியம்
by admin - 0

ராமேஸ்வரம் : நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களிடம், இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி இறால், நண்டு, மீன்களை கொள்ளையடித்து விரட்டினர். ராமேஸ்வரத்தில் இருந்து ஆக.,31ல், நூறுக்கும் குறைவான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள், நடுக்கடலில் மீன்பிடித்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், துப்பாக்கியை காட்டி மிரட்டி, மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். உயிருக்கு பயந்து கரையை நோக்கி வந்த, நான்கு படகுகளை மடக்கி பிடித்து, இறால், நண்டு மீன்களை பறித்து, வலை மற்றும் போட்பலகையை வெட்டி கடலில் மூழ்கடித்தனர். இதனால், நான்கு படகிற்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் நஷ்டமும், கடற்படை விரட்டியதால் தொழில் நஷ்டத்தில் பெரும்பாலான படகுகள் கரைக்கு திரும்பின. இலங்கை கடற்படையின் நடவடிக்கையால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
« PREV
NEXT »

No comments